தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “புதிய கட்டிடம் மற்றும் திருவள்ளுவர் திருவுருவச்சிலை திறப்பு விழா” நடைபெற்றது.
கல்லூரியின் புதிய அலுவலகத்தை டாக்டர் சந்தோசம், புதிய அலுவலகம் மற்றும் திருவள்ளுவர் திருவுருவ சிலையையும் பத்மசிங் ஐசக் திறந்து வைத்தார்.

விழாவிற்கு விஜிபி உலக தமிழ்ச் சங்கத் தலைவர் செவாலியர் டாக்டர் வி.ஜி சந்தோஷம் மற்றும் சென்னை ஆச்சி குழும தலைவர் மற்றும் நிறுவனர் யத்மசிங் ஐசக் கலந்து கொண்டு பேசிவையில்,
வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல தன்னம்பிக்கை, நேர்த்தியான திட்டமிடல் மற்றும் தொடர்ந்து முயற்சி செய்தல் ஆகியவை முக்கியம்.
எண்ணங்களை கனவுகளாக மாற்றி, நம்பிக்கையுடன் செயல்பட்டால், எந்த உயரத்தையும் அடைய முடியும்
தொழில்முனைவோராகவோ அல்லது வேலைவாய்ப்பிலோ சாதிப்பதற்கு மனதில் தெளிவும், உழைப்பும் இருந்தால் போதும் என்று கூறினர்.
வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால், முதலில் குறிக்கோள்களை தெளிவாக அமைத்து தனித் திறன்களை மேம்படுத்த வேண்டும்.
பயத்தைக் கலைத்து, தைரியமாக முயற்சிக்க வேண்டும். கேள்வி என்பது அறிவின் ஆரம்பம் ஒவ்வொரு சமயத்திலும், ஏன், எப்படி என்று கேட்பது மூலம் அறிவை விரிவுபடுத்த வேண்டும்.
வாழ்க்கையில் எதை அடைய வேண்டும் என்றாலும், சுய ஒழுக்கம் மிக முக்கியம். தனிப்பட்ட முறையில் நேரத்தைப் பராமரிக்க கற்றுக்கொள்ள வேண்டும். கனவுகளை அடைய உழைப்பதில் சுய ஒழுக்கமும், பொறுமையும் மிக அவசியம்.
“நம்பிக்கை மற்றும் உழைப்பு” ஆகியவையே வெற்றியின் இரு முக்கிய அம்சங்கள் ஆகும் தோல்வி என்பது ஓர் அனுபவம் மட்டுமே. ஒவ்வொரு தோல்வியும் புதிய பாடங்களை கற்றுத் தரும். அதனால் ஒரு தடவை தோல்வி அடைந்தால், அது முடிவு என்று நினைக்காமல் ஒவ்வொரு தோல்வியும் இன்னும் பலமாக, புத்திசாலியாக மாற்றும் என்று வலியுறுத்தினர்
கல்வி என்பது மனிதனை மேம்படுத்தும் துறையாகும். அதை நேர்மையுடனும் தரமுடனும் வழங்கும் நிறுவனங்கள் மட்டுமே சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும்.
எதிர்காலத்தில் கல்லூரி மேலும் பல வெற்றிகளை பெற்றிடவும் மாணவர்கள் நல்ல கல்வியைப் பெற்று, உயர் நிலைகளுக்கு செல்லவும், ஆசிரியர்கள் கல்வித் துறையில் தரத்தை உயர்த்தும் முயற்சிகளில் தொடர்ந்து திகழவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நல்ல திட்டமிடல், நவீன தொழில்நுட்பம் உயரிய மாணவர்களின் முயற்சி ஆகியவை மூலமாக கல்லூரி தேசிய மற்றும் உலகளவில் பெருமை அடைய வாழ்த்தினர்
மாணவியர்கள் கல்வியால் உருப்பெற்று, ஆசிரியர்கள் அர்ப்பணிப்பால் வழிநடத்தி, நிரவாகம் நெறிமுறையுடன் வளர்ந்து கல்லூரி, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கல்வி அரங்கிலும் தலைசிறந்த இடத்தைப் பெற வாழ்த்துக்களை கூறி உரையை நிறைவு செய்தனர்.

விழாவில் கல்லூரியின் செயலாளர் காசிபிரபு வரவேற்புரை வழங்கினார்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத் தலைவர் ராஜமோகன் தலைமையுரையாற்றினார்.
உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல் மற்றும் பொருளாளர் பழனியப்பன் முன்னிலையுரையாற்றினர்.
கல்லூரியின் இணைச்செயலாளர்கள் அருண், செண்பகராஜன், கல்லூரி முதல்வர் முனைவர் சித்ரா உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் மதுரை இலக்கியமன்ற தலைவர் ஆவனி மாடமசாமி, சென்னை அயனாபுரம் நாடார் உறவின்முறை தலைவர் பிரபாகரன், பொதுச்செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் மோகன், தொழிலதிபர் துர்காவஜ்ரவேல் மற்றும் நமது தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள், கல்லூரி முனைவர் கோமதி, மற்றும் முனைவர் சரண்யா, துணைமுதல்வர் சுசீலாசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
