தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம், சுகாதார வளாகம் மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாடு இன்றி பூட்டியே கிடந்து வருகிறது.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பகுதியில் 2013 – 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் திருமதி கனிமொழி அவர்களின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இறகு பந்து விளையாட்டரங்கம் சுமார் 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இதே போல் வளாகத்தில் 2015 – 2016 ஆம் உடற்பயிற்சி கூடம் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் வரக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய சுகாதார வளாகம்
ஆண்களும் பெண்களும் பயன்படுத்தக்கூடிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016 – 2017 ஆண்டு பெண்கள் சுகாதார வளாகம் சுமார் 8 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ளது.

மேலும் சிறுவர் பூங்காவும் பொதுமக்கள் பயன்பாட்டின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பழனியில் செட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தால் அரசு திட்டங்கள் பல லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டவை கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவில் பூட்டி வைக்கப்பட்டுள்ள திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என முன்னாள் திமுக ஒன்றிய பிரதிநிதி கார்த்திகேயன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், திமுக எம்பி கனிமொழி இடம் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பூட்டியே கிடக்கும் அரசு நலத்திட்டங்களை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென எம்பி கனிமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இ