தேனி மாவட்டம் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் பழங்குடியினர் நரிக்குறவ மக்களுக்கு கடன் வழங்காமல் அலைக்கழிப்பு செய்வதாக குற்றச்சாட்டு.

தேனி மாவட்டம் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் பழங்குடியினர் நரிக்குறவ மக்களுக்கு கடன் வழங்க அலைக்கழிப்பு செய்வதாக குற்றச்சாட்டு.
கொட்டும் மழையில் வங்கியை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
தேனி தென்றல் நகர் நரிக்குறவர் காலனி தாட்கோ ஆதிதிராவிடர் பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் 33 பேர் உறுப்பினராக உள்ளனர்.

தமிழக முழுவதும் தாட்கோ மூலம் 55 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கவும் இதில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி போக 45 ஆயிரம் ரூபாய் கடன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பழங்குடியினர் நரிக்குறவ மக்களுக்கு தமிழகம் முழுவதும் 55 ஆயிரம் ரூபாய் அனைவருக்கும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தேனி மாவட்டம் மதுரை மத்திய கூட்டுறவு வங்கியில் பல்வேறு காரணங்களை கூறி இவர்களுக்கு கடன் வழங்காமல் தொடர்ந்து அலைக்கழிப்பு செய்து வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக அலைக்கழிப்பு செய்வதால் உடனடியாக கடன் வழங்க கோரி மதுரை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கொட்டுமலையில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.