தேனி மாவட்டம், தேனி தாலுகா, கொடுவிலார் பட்டி சாலையில் உள்ள ஐஸ்வர்யா நகர், என்கேஜே கேட்டரிங் மற்றும் பாரா மெடிக்கல் கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீலைக்காரி அம்மன், அருள்மிகு ஸ்ரீ சமயணன் கருப்பசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.
அருள்மிகு ஸ்ரீ சீலைக்காரி அம்மன், அருள்மிகு ஸ்ரீ சமயணன் கருப்பசாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
ஆவணி மாதம் 17ம் தேதி, செப் 2.9.2025 தேதி செவ்வாய் கிழமை காலை பூர்வாங்கம் மங்கள இசை, ஸ்ரீகுருப்ரார்த்தனை அனுக்ஞை, ஸ்ரீவிக்னேஸ்வரர் பூஜை, புண்யஹ வாசனம், வேதிகா ஆராதனம், ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ சுதர்ஸன ஹோமம், ஸ்ரீ சூக்த விதனா மஹாலக்ஷ்மி ஹோமம், தன பூஜை, நவக்ரஹ ஹோமம், பூர்ணாகுதி, மந்த்ர புஷ்பம்
காலை 11.15 மணிக்கு உபசாரங்கள், மஹா தீபாராதனை, பிரஸாதம் வழங்குதல்,
மாலை 5 மணிக்கு முதற் கால யாகவேள்வி: மங்கள இசை, வாஸ்து சாந்தி, ம்ருத்ஸங்கரணம், அங்குரார்பணம், ஆச்சார்ய ரக்ஷ்ரபந்தனம், கும்ப அலங்காரம், கலாஹர்ஷனம், யாக மண்டப ஆராதனம், கடஸ்தாபனம், வேதிகார்ச்சனை, முதற்கால யாக வேள்வி, விசேஷ த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி, வேத, ஆகம, நாத, கீத வாத்ய உபசாரங்கள்.
இரவு 9 மணிக்கு திபாராதனை, பிரஸாதம் வழங்குதல்,
இரண்டாம் நாள் ஆவணி மாதம் 18ம் தேதி செப், 3-09-2025 புதன்கிழமை
காலை 7.25 மணிக்கு
இரண்டாம் கால யாகவேள்வி : மங்கள் இசை, ஸ்ரீ விக்னேஸ்வரர்
பூஜை, புண்யாஹவாசனம், ஆச்சார்ய விசேஷ சந்தி, பூத சுத்தி, யாக மண்டப ஆராதனம், வேதிகார்ச்சனை. இரண்டாம் கால யாக வேள்ளி, விசேஷ த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை. வேத. ஆகம. நாத, கீத வாத்ய உபசாரங்கள்
காலை 11.00 மணிக்கு
மஹா தீபாராதனை, பிரஸாதம் வழங்குதல், தொடர்ந்து சயனதி வாஸம், யந்தர ஸ்தாபனம், விமான கசை ஸ்தாபனம், விக்ரஹப்ரதிஷ்டை
மாலை 5.00 மணிக்கு
மூன்றாம் கால யாகவேள்வி : மங்கள இசை, ஸ்ரீ விக்னேஸ்வரர்
பூஜை, புண்யாஹ வாசனம், ஆச்சார்ய விசேஷ சந்தி, பூத சுத்தி,யாக மண்டப ஆராதனம், வேதிகார்ச்சனை, மூன்றாம் கால யாக வேள்வி, விசேஷ த்ரவ்யாகுதி, பூர்ணாகுதி, வேத ஆகம. நாத, கீத வாத்ய உபசாரங்கள்
இரவு 9.15 மணிக்கு
மஹாதீபாராதனை, பிரஸாதம் வழங்குதல் நடக்கிறது.
மூன்றாம் நாள் ஆவணி 19ம் தேதி செப் 04-09-2025 வியாழக்கிழமை
காலை 7.35 மணிக்கு
நான்காம் கால யாக வேள்வி: மங்கள இசை, ஸ்ரீவிக்னேஸ்வரர், பூஜை, புண்யாஹ வாசனம், ஆச்சார்ய விசேஷ சந்தி, பூத சுத்தி, யாக மண்டப ஆராதனம், கோ பூஜை. அஸ்வ பூஜை, கன்யா பூஜை. சுவாசினி பூஜை (சுமங்கலி பூஜை) நான்காம் கால யாக வேள்வி. நாடி ஸந்தானம், ஸ்பர்ஸாகுதி, வஸ்த்ராகுதி, விசேஷ த்ரவ்யாகுதி. மஹா பூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ராதானம், கடம் புறப்பாடு. விமான மஹா கும்பாபிஷேகம். மூலவர் மஹா கும்பாபிஷேகம், மந்த்ர புஷ்பம். வேத, ஆகம நாத கீத, வாத்ய உபசாரங்கள்
காலை 11.30 மணிக்கு
மஹாதீபாராதனை, பிரஸாதம் வழங்குதல்.
மஹா கும்பாபிஷேக நிகழ்வுக்குப்பின் அன்னதானம் நடைபெறும் என கோவில் நிர்வாகி மற்றும் என்கேஜெ கேட்டரிங் மற்றும் பாரா மெடிக்கல் காலேஜ் எஸ். சீனிவாசன், தெரிவித்துள்ளார்.




