தேனி மாவட்டம், கொடுவிலார் பட்டி கிராமத்தில் தேனி ஸ்டார்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை பொதுநல மருத்துவர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.

தேனி ஸ்டார்ஸ் ரோட்டரி சங்க தலைவர் கயல்விழி ரமேஷ், செயலாளர் அபிநயா, பொருளாளர் பிரியங்கா, பள்ளப்பட்டி சேர்ந்த
மருத்துவ முகாம் ஒருங்கிணைப்பாளர் சலீமா செய்திருந்தார்.

இதில் மருத்துவ முகாமில் தோல் நோய் மருத்துவர் சந்தியா, காது மூக்கு தொண்டை சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் சௌமியா சிவரஞ்சனி,பல் மருத்துவர் லட்சுமி பிரியா பல் மருத்துவர் பிரியங்கா உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமில் பொது மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தனர்.