முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

சாலையோரம் சுற்றித்திரிந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சை

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பிஸ்மி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சுமார் 50வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, அழுக்கு உடையுடன் மிகவும் மோசமான நிலையில் ஆதரவின்றி சாலையோரம் சுற்றித்திரிந்தார்.

இதனையறிந்த கண்டமனூர் கிராம நிர்வாக அலுவலர் அன்பழகன் க.விலக்கு காவல்துறையினர்க்கு தகவல் அளித்தார்.

உடனே வீரபாண்டி கோவில் திருவிழாவில் இந்தியன் ரெட்கிராஸ் தன்னார்வலர் பணி முடிந்து வீடு திரும்பிய ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார்க்கு காவல்துறையினர் தகவல் அளித்தனர்.

தகவலறிந்த ரஞ்சித்குமார் க.விலக்கு காவல்துறையினர் உதவியுடன் அப்பெண்ணை மீட்டு, பெரியகுளம் அரசு தலைமை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டார்.

மேலும் சிகிச்சைக்குப் பின்பு அப்பெண்ணை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.