தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டி கால்நடை மருத்துவமனையில் ஆழ்துளை கிணற்றில் இருந்த மோட்டார்,வயர், பைப்பு, திருடி சென்றதால் கால்நடை மருத்துவமனையில் கை கழுவ கூட தண்ணீர் வசதியின்றி விவசாயிகள் மருத்துவர் பெண் பணியாளர் உள்ளிட்டவர்கள் தினந்தோறும் தவித்து வருகின்றனர்.

கொடுவிலார் பட்டியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு காலகால்நடை மருத்துவமனை சுமார் 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்த மோட்டார், வயர் மற்றும் பைப்புகளை திருடி சென்றுள்ளனர்.

கால்நடை மருத்துவமனையில் ஆள்துளை கிணற்றில் இருந்த மோட்டார், வயர், பைப்புகள் திருட்டு பழனிசெட்டிபட்டி காவல்துறையில் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் ஆழ்துளை கிணற்றில் மோட்டார், வயர், திருடப்பட்டதால் தண்ணீர் வசதியின்றி விவசாயிகள் மற்றும் மருத்துவர்,பெண் பணியாளர் தினதொரும் கை கழுவ கூட தண்ணீர் இன்றி தவிர்த்து வருகின்றனர்.

மேலும் கால்நடை மருத்துவமனையில் சுற்றுச் சுவர் இல்லாத காரணத்தால் அருகே உள்ள மதுபான கடையில் மதுபானங்களை வாங்கி வரும் குடிமகன்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் மது பாட்டில்கள் பிளாஸ்டி உள்ளிட்டவைகளை வீசி செல்கின்றனர்.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.