தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் தேவாரம் சாக்குளத்து மெட்டு மலைப்பாதையில் நடைபயணமாக ஆய்வு மேற்கொண்டார்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் 25 மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கேரளாவிற்கு செல்ல வேண்டும் என்றால் போடிமெட்டு, கம்பம் மெட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும் . தேவாரம் சாக்குளத்து மெட்டு வழியாக சென்றால் கேரளாவிற்கு 4 கிலோமீட்டர் தூரம் செல்ல முடியும்.
இந்த மலைப் பாதையை வாகனங்கள் சென்று வருவதற்கான சாலை அமைத்து தர பல வருடங்களாக போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்து வருகின்றது.
இதைக் கருத்தில் கொண்டு இன்று தேனி பாராளுமன்ற உறுப்பினர் தேவாரத்தில் இருந்து சாக்குளத்து மெட்டு வழியாக மலைப்பாதையில் நடைபயணமாக செய்து ஆய்வு மேற்கொண்டார் .
இந்த ஆய்வில் வனத்துறையினர். போலீசார்.ஊர் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் தங்க தமிழ்ச்செல்வன் உடன் நடைபயணம் மேற்கொண்டனர்.
தங்க தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறுகையில். இந்த சாக்குளத்து மெட்டுப் பாதை ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட சாலை. ஆனால் வனத்துறையினர் இந்த சாலையை பயன்படுத்த அனுமதிக்கவில்லை என்றும் இதை திராவிட முன்னேற்றக் கழக அரசு கூடிய விரைவில் சாலை அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்றும் அதற்கான முதற்கட்ட பயணமாக சாக்குளத்துமெட்டு மலைப்பாதையில் ஆய்வு மேற்கொள்வதற்காக நடைபயணம் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
ஆய்வு முடிந்த பின்பு மத்திய மாநிலஅமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்து சாலை அமைப்பதற்கான வழிவகை செய்யப்படும் நூறு சதவீதம் சாலை அமைக்கப்படும் என்று கூறினார்.
