தேனி மாவட்டம் சிலமலை கிராமத்தைச் சேர்ந்த பசுமை பங்காளர் நிறுவனர் முருகனுக்கு, நான்கு லட்சம் பனை மரங்கள் மற்றும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் என மொத்தம் 4,50,000 மரக்கன்றுகள் நடவு செய்து சாதனை செய்ததால் தமிழ்நாடு அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சிலமலை முருகனுக்கு, பசுமை முதன்மையாளர் விருது, ஒரு லட்சம் பரிசு சான்றிதழ், வழங்கப்பட்டது.
இ

இதே போல் பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகள் நடவு செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக
வனத்துறை சார்பில் சமூக பாதுகாவலர் விருது 25 ஆயிரம் ரூபாய் சான்றிதழ் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் வழங்கினார்.

இந்த இரண்டு விருதுக்கும் வழங்கப்பட்ட ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பனைமரங்கள் மற்றும் மரங்கள் வளர்க்க பசுமை பங்காளர் நிறுவனர் முருகன் வழங்கினார்




