டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ஒடுக்கப்பட்டோர் உரிமை காப்பு நாளாக கீழவாளாடி கிராமம், அன்பு இல்லத்தில், லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் அன்புராஜா தலைமை ஏற்றார். இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பாபுராஜ் , இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் செல்வி மற்றும் இலால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக இலால்குடி மாவட்ட செயலாளர் அங்கமுத்து, மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, மண்ணச்சநல்லூர் ஒன்றிய துணை தலைவர் பெரியசாமி, மண்ணச்சநல்லூர் நகர தலைவர் பாலசந்தர், முன்னாள் திருச்சி மாவட்ட செயலாளர் சிவசங்கர், முத்துசாமி, முருகன் திருவரங்கம் பகுதி செயலாளர், திருப்பைஞ்சீலி முருகேசன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய முன்னாள் செயலாளர், லால்குடி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பனிமலர் செல்வன், லால்குடி மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் இன்பராஜ், பொதுக்குழு தலைவர் செம்பரை தர்மராஜ், புள்ளம்பாடி ஒன்றிய பொறுப்பாளர்கள் திருநாவுக்கரசு, சித்தார்த்தன் பலர் கலந்து கொண்டனர்.
திராவிட முன்னேற்ற கழக தோழர் பிரதிவிராஜ், லால்குடி ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சண்முகவேல், கௌதமன், கிள்ளிவளவன், கீழவாளாடி கிளை கழக இளைஞர் அணி செயலாளர் விக்னேஷ், ரஞ்சன், வாணிதாசன், மகளிர் அணி பொறுப்பாளர்கள், வசந்தகுமாரி, மீனா, தனலட்சுமி, சுமதி, மாணவர் அணி செ. அ. அறிவு சுடரொளி, செம்பழநி ஆனந்த், வாழ்மான பாளையம் பிச்சையா, கீழவாளாடி அபிநயா, ஜீவானந்தம், கரிகாலன், சி.அம்பேத்கர், லத்தீஸ்வரன், ரட்சகன், சூர்யா, அஸ்வின்ராஜ், அ. முருகேசன், பி.அம்பேத்கர், மகிழன். இ. வினோத், க. ஹரிஸ், க. ஹரிணி, ஜெ. காவ்யா, ஷீலா, காயத்ரி, சுஜாதா மற்றும், பெரியார் பிஞ்சுகள் மெர்தனா, கார்த்தி, சிவேஷ், சக்தி, தேஜஸ்வினி, சமிக்சா, டீமா, இளையநிதி, அபர்னா, சங்கமித்ரா, ரிஜா, ரித்திசா, ரேகன், ஜனனி, மித்ரா, அஜய் நேசன், ஸ்ரீநிதி, உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொடக்கமாக செல்வி வரவேற்புரை வழங்கி. டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் மானமிகு பாச்சூர் அசோகன், பகுத்தறிவு பாடல்கள் பாடினார்.
லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் பாபுராஜ் “அறிவுலக மாமேதை டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் இன் பொருளியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், முனைவர் தமிழரசன், பேராசிரியர் (ஓய்வு) அவர்கள்” சங்கத்தமிழ் இலக்கியங்களில் சமூக நீதி “என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார், வேலையை 8 மணி நேர வேலையாக குறைப்பதற்கு முக்கிய காரணமாக டாக்டர் அம்பேத்கர் அமைந்தார், இந்து சட்ட மசோதாவில் பெண் சொத்துரிமை மசோதா, விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை, சம்பளத்துடன் மகப்பேறு விடுமுறை, சுரங்கத் தொழிலில் பெண்களை ஈடுபடுத்த கூடாது முதலான உரிமை தொடர்பானவற்றில் அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் குறித்து எடுத்துரைத்து பகுத்தறிவு பாடல்களை பாடினார் தனி துறை உருவாக்க படவேண்டும். மகளிர் மட்டுமே கொண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுவது போல அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டு அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு துறையிலும் தனி நிர்வாக அமைப்புகளை அரசு உருவாக்க வேண்டும்.
கீழ வாளாடி கிராமம் விழாக்கோலம் பூண்டு, பெருமளவில் மகளிர், இளைஞர்கள், பெரியார் பிஞ்சுகள், இருபால் மாணவர்கள், கல்வியாளர்கள் என விழா சிறப்பாக நடைபெற்றது.இறுதியாக முனைவர் அன்புராஜா லால்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நன்றியுரை வழங்கினார்.

