தேனி அருகே இடப்பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரமடைந்த நபர் வீட்டின் மீது கற்களை வீசியும், கடப்பாறை கம்பியை கொண்டு தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது

அல்லிநகரம் அருகே சுக்குவாடன்பட்டியில் வசித்து வரும் ரவிராஜ் என்பர் மனைவி ஜனனிக்கு சொந்தமான வீட்டிற்கு பின்புறம் உள்ள இடத்தை காவல் ஆய்வாளரின் கணவர் சரவணன் என்பவர் மிரட்டி கேட்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜனனி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சரவணனின் மனைவி காவல் ஆய்வாளர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததால் வீட்டில் கற்களை கொண்டும், கடப்பாரை கம்பியை கொண்டும் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது