முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

தேவாரம் பேரூராட்சியின் நிர்வாக நிதி முறைகேடுகளை கண்டித்து பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம். உத்தமபாளையம் தாலுகா.தேவாரம் பேரூராட்சியின் நிர்வாக. நிதி முறைகேடுகளை கண்டித்து தேவாரம் மாவீரர் திடலில் பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் தேவாரம் பேரூராட்சிக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பையும்,நிதி இழப்பையும் ஏற்படுத்தி வருகின்ற செயல் அலுவலர் பாலசுப்ரமணியனை பணி நீக்கம் செய்து ஊழல் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தேவாரம் பேரூராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்ய ஊழல் தடுப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும். விதிமுறைகளை மீறி நடத்தப்பட்ட வாரச்சந்தை, கழிப்பறை, தினசரி சந்தை, ஆடு அடிக்கும் தொட்டி ஏலத்தை ரத்து செய் வேண்டும். வீட்டுமனை பிரிவிற்கு முறைகேடாக அளித்த அனுமதியை ரத்து செய் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பாண்டியர் குல நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.