முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

சட்டவிரோதமாக கல்குவாரிக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து மலை மீது ஏறி எதிர்ப்பு

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, காமய கவுண்டன் பட்டியில் செயல்பட்டு வரும் கல் குவாரியை தடை செய்யக் கோரி 40 ஆண்டுகளாக மலையில் கைகளில் கல் உடைத்து வரும் தொழிலாளர்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு கல்குவாரி மலை மீது ஏறி கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்.

காமய கவுண்டன் பட்டியில் உள்ள கல்குவாரியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் பொது மக்கள் வருவாய் துறையினர் அனுமதி உடன் கல் உடைத்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக கல்குவாரியை ஒரு சிலர் வருவாய்த்துறை அதிகாரிகளில் உதவியோடு சட்டவிரோதமாக புலிகள் சரணாலய பகுதியில் வெடி வைத்து கனிம வளத்தை ஹிட்டாச்சி இயந்திரம் உடைத்து தினந்தோறும் கேரளா மாநிலத்திற்கு ஜல்லி கற்கள், உடை கற்கள், எம் சாண்ட், பி சாண்ட் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது.

இதனால்சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கல்குவாரி தடை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கல்குவாரிய முற்றுகையிட்டு மலை மீது ஏறி கோஷமிட்டனர்.

காவல்துறையினர் வருவாய்த்துறை அதிகாரிகள் வருகை தந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் கல்குவாரி மலை மீது ஏறி தமிழக அரசுக்கு எதிராகவும் கனிமவள அதிகாரிகளுக்கு எதிராகவும் தங்களது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஏழை எளிய மக்களை கல்லுடைக்க விடாமல் பெரும் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றும் பாரம்பரியமாக கல் உடைத்து வரும் பொது மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.