தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா
குள்ளப்புரம் கிராமத்தில் 10 மேற்பட்ட கல் குவாரிகள், கிரஷர் செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக கல்குவாரி திறக்க ஆய்வுக்கு சென்ற கனிமவளத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடத்த வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.
அப்போது குள்ளப்புரத்தில் உள்ள 10 கல் குவாரிகளின் பணிகளை உடனே நிறுத்த வேண்டும்.

மேலும் பெரியகுளம் சப்-கலெக்டர் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம், கனிமவளத் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அந்த குவாரிகளில் ஆய்வு செய்து பாதிப்புகள், விதிமீறல்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றனர்.
மேலும் விவசாயிகளின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப் பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெரால்டு அலெக்சாண்டர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.
கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையில் குள்ளப்புரம் கிராமத்தில் கல்குவாரி மற்றும் கிரஷர் புதிதாக திறக்க ஆய்வு நடத்த சென்றனர்.
அப்பொழுது குள்ளப்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கனிமவளத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,