தேனி பழைய பேருந்து நிலையம் அருகே ரேஷன் கடைக்கு செல்லக்கூடிய பொதுப் பாதை, அடைத்து கேட் போட்டு, அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டும் நபரை கைது செய்து, பணியை தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி பழைய பேருந்து நிலையம், 29 வது வார்டுக்கு உட்பட்ட பூமார்க்கெட் அருகிலுள்ள சுப்பன் செட்டி தெருவில் இருக்கின்ற நியாய விலைக்கடைக்கு செல்லும் பொதுப்பாதையை வழி மறித்து ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வரும் தனிநபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட செயலாளர் மள்ளர் பாலா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் தேனி நகராட்சி நிர்வாக ஆணையர், நகராட்சி சேர்மன், .வார்டு கவுன்சிலர் உள்ளிட்டவர்கள் கட்டிடம் கட்டும் நபரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு செயல்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே தேனி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ரேஷன் கடைக்கி செல்லக்கூடிய பொது பாதையை ஆக்கிரமித்து கேட் போட்டு கட்டிடம் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி தனிநபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




