தேனி மாவட்டம், பூமலைக்குண்டு கிராமத்தில் பட்டியலின மக்களை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, அவர்களுடைய நிலங்களை அபகரிக்க முயற்சி செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் இந்து மதத்திலிருந்து வேறு மதத்திற்கு மாற முடிவு செய்துள்ளனர்.

கதிர் வாரன்,,பொன்னன் ,பழனிவாரன்,பட்டியல் இனத்தைச் சேர்ந்த நபர்களுக்கு அரசால் நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட நிலத்தில் அவர்களுடைய வாரிசுகள் விவசாயம் செய்ய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனை பூமலைக்குண்டு கிராமத்தில் வசிக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்த பாபு ராஜன், கம்ப்யூட்டர் ராஜன் துரைப்பாண்டி கருப்பையா என்ற சந்திரசேகர், சென்ராயன் உள்ளிட்ட சிலர் விவசாயம் செய்ய விடாமல் தடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்து பட்டியலின மக்களின் விவசாய நிலங்களை அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து வீரபாண்டி காவல் நிலையம், தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தேனி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் பட்டியல் சமூக மக்கள் மதம் மாறப்போவதாக இன்று தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கிடம் கோரிக்கை மனு அளித்தனர்.




