ள
சமீபத்தில், +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், கல்லூரி சேர்க்கைக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் செயல்பட்டுவரும் 176 அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
https://www.tngasa.in
வழியாக, எதிர்வரும் மே-27 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம்.
அந்தந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை உதவி மையமும் அமைக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் அந்தந்த மொழிப் பாடங்களின் இளங்கலை பாடப்பிரிவுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். மீதமுள்ள 4 பாடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படும் தரவரிசையின் அடிப்படையில், அவர்கள் விரும்பும் பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.பி.ஏ.,பி.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளின் சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும் என்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
விண்ணப்பக்கட்டணம் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கும் ரூ.2 என்றும் மற்ற பிரிவினர்களுக்கு ரூ50 என்பதாகவும் நிர்ணயித்திருக்கிறார்கள்.
தேனி மாவட்டம், வீரபாண்டி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.ஏ.பொருளியல், பி.காம் (வணிகவியல்), பி.எஸ்.ஸி.கணிதம்,பி.எஸ்.ஸி.கணினி அறிவியல் மற்றும் பி.சி.ஏ. கணினி பயன்பாட்டியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 2025-26-ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் மாணவ மாணவிகள் பாடப்பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கும், விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கும் மாணவர் சேர்க்கை உதவி மையம் (Help Desk) கல்லூரியில் இயங்கி வருகிறது.
தொடர்புக்கு முனைவர் ப.அன்புச்செல்வன் (97510 34133) மற்றும் திரு S.ராஜ்குமார் (81245 96204) அலுவலகத் தொலைபேசி எண் 04546-294429. மாணாக்கர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 27.05.2025 அன்றுடன் நிறைவு பெறுகிறது என கல்லூரி முதல்வர் முனைவர் ப.உமாதேவி அவர்கள் தெரிவித்துள்ளார்.