முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

சில்வார்பட்டி ஊராட்சி மன்ற முறைகேடு ஆட்சியர் அலுவலகத்தில் புகார், திமுக ஒன்றிய துணைச்செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல்

By Web Desk

Updated on:

---Advertisement---

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வெங்கிடாசலம்.

இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரியகுளம் வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஆவார். இவர் கடந்த மாதம் ஏப்ரல் 04 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் சில்வார்பட்டி ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி செயலர் வீரபத்திரன் என்பவர் கல்லூரியில் படித்து வரும் அவரது மகன் யோக பாலாஜி பெயரிலும், ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் சித்ரா மற்றும் அவரது கணவர் தங்கவேல், மற்றும் சில்வார்பட்டி ஊராட்சியில் வாட்டர் மேனாக பணிபுரிந்து வரும் நபர் தனது வயது ஆவணத்தை திருத்தம் செய்து 60 வயதைக் கடந்தும் ஓய்வு இல்லாமல் பணியாற்றி வருகிறார்.

மேலும் நூறு நாள் வேலை திட்டத்தில் ஆட்களை பயன்படுத்தாமல் ஜேசிபி வாகனத்தை பயன்படுத்தி பணிகள் மேற்கொண்டு, இத்திட்டத்தில் ஆட்கள் வேலை செய்ததாக பொய்யாக கணக்கு காட்டி முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றம்சாட்டி பல்வேறு பெயர்களில் போலியாக கணக்கு காட்டி பணம் கையாடல் செய்துள்ள ஊராட்சி செயலர் மீதும் முறைகேடுகளுக்கு துணை போன ஊராட்சியில் பணிபுரிந்து வரும் தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியகுளம் திமுக வடக்கு ஒன்றிய துணைச்செயலாளர் வெங்கிடாசலம் குறிப்பீட்டிருந்தார்.

அதன்பின்னர் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி அந்த புகார் தொடர்பாக உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்நிலையில் ஒன்றிய துணைச்செயலாளர் வெங்கடாசலம் அப்பகுதியில் உள்ள டீ கடையில் அமர்ந்திருந்த போது வாட்டர் மேனாக பணிபுரியும் கடம்பவணம் மற்றும் அவரது சகோதரர் முருகன் ஆகியோர் வெங்கிடாசலம் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

அதன்பின்னர் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஒன்றிய துணைச்செயலாளரை மக்கள் கூடும் இடத்தில் கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

சம்பவம் குறித்து தேவதானப்பட்டி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். வ