கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்துள்ளதால் விவசாய கடன்கள் அனைத்தையும் ரத்து செய்ய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கடந்த ஐந்து ஆண்டுகளாக விவசாயிகளின் கடன் சுமை அதிகரித்து வருவதாலும், பருவநிலை மாற்றத்தால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு விவசாய கடன் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும்.
விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு உற்பத்தி மானியமாக ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் வக்பு வாரியமும், தமிழகத்தில் உரிமை பெற்ற பத்திரம் மற்றும் பட்டா உள்ள நிலங்கள் சுமார் 13 லட்சம் ஏக்கர் நிலங்களை தங்களுக்கு சொந்தமானது என உரிமைகோருவதை தடுத்து நிறுத்தி சட்டம் இயற்றி பாதுகாப்பு வழங்க வேண்டும் என
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகன் சாமி, சின்னமனூரில் நடைபெற்ற ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் நேதாஜி,
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்
தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி ராஜ், தேனி மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை,காஜா பழனிச்சாமி,தினேஷ்.உட்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்
விவசாயிகள் உரிமை மீட்பு மற்றும் கடன் விடுதலை மாநாடு
ஈரோடு விஜயமங்கலத்தில் டிசம்பர் 28 தேதி மாநாடு நடைபெறுகிறது.




