தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பள்ளிகளுக்கு நேரடியாக பாடப் புத்தகங்களை சென்று வழங்காமல் முறைகேடு செய்வதாக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம். போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, உட்பட 8 ஒன்றியங்களில் சுமார் 650, ஆரம்ப பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
கோடை விடுமுறை முடிந்து வரும் 2 தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இதனால் பள்ளிகளுக்கு தேவையான பாடப் புத்தகங்கள், புத்தக பைகள், சீருடைகள், காலணிகள் உள்ளிட்ட தேவையான அனைத்து உபகரணங்களும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பள்ளியில் சென்று வழங்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
இந்த நிலையில் 2025 – 2026 ஆம் ஆண்டு பள்ளிகளுக்கு தேவையான பாட புத்தகங்கள் உள்ளிட்டவை சென்று உபகரணங்களை வழங்காமல் ஒரு குறிப்பிட்ட பள்ளியிலே வைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் அல்லது ஆசிரியர்களை வந்து எடுத்துச் செல்லுமாறு வட்டார கல்வி அலுவலர்கள், மே 29, 30 தேதி காலை 10 மணி முதல் மாலை 4 வரை வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதனால் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புத்தகங்களையும் மாணவர்கள் தேவையான உபகரணங்களையும் வந்து தங்களுடைய சொந்த செலவுகளில் எடுத்துச் செல்லும் அவலம் நீடித்து வருகிறது.
அரசு பள்ளிகளுக்கு தேவையான உபகரணங்களை நேரடியாக சென்று வழங்க நிதி ஒதுக்கியதை, கையகப்படுத்தி வைத்துக்கொண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று வழங்கியதாக ஆவணங்கள் தயார் செய்து வைத்து வருகின்றனர்.
ஆண்டிபட்டி ஒன்றியத்தில் வட்டார கல்வி அலுவலர் வீராசாமி , அரசு நிதியை கையகப்படுத்தி வைத்துக்கொண்டு பள்ளிகளுக்கு நேரடியாக சென்று புத்தகங்கள் வழங்கியதாக முறைகேடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எனவே இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.