முத்து தேவன் பட்டி பகுதியில் தனியார் தொழிற்சாலை சுவர் கட்டும் பணிக்காக கோவிலை இடித்து தரைமட்டமாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் கோவில் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் முத்து தேவன் பட்டி பகுதியில் சுமார் 110 குடும்பங்கள் சுமார் 35 ஆண்டுகளாக கோவிலை வழிபட்டு வந்தனர்.

இந்த கோவிலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலை முதலாளி சுற்றுச்சுவர் கட்டும்பணியின் போது கோவிலை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டார்.
எனவே அப்பகுதியில் மீண்டும் கோவில் கட்டி வழிபட அனுமதி வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்




