முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாக அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து கூடம்-விளையாட்டரங்கம்

By Web Desk

Updated on:

---Advertisement---

 

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பூட்டிய கிடக்கும் இறகு பந்து விளையாட்டரங்கம். உடற்பயிற்சி கூடம், சுகாதார வளாகம். சிறுவர் பூங்கா உள்ளிட்டவை பொதுமக்கள் பயன்பாடு இன்றி பூட்டியே கிடந்து வருகிறது.

 பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் பகுதியில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இறகு பந்து விளையாட்டரங்கம் சுமார் 25 லட்சம் மதிப்பீடு கட்டப்பட்டுள்ளது.

இதே வளாகத்தில் 2015 – 2016 ஆம் உடற்பயிற்சி கூடம் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.

மேலும் இறகு பந்து விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சி கூடம் வரக்கூடிய பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் சுகாதார வளாகம்.ஆண்களும் பெண்களும் பயன்படுத்தக்கூடிய தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2016-20 17 ஆண்டு பெண்கள் சுகாதார வளாகம் சுமார் 8 லட்சம் ரூபாய் கட்டப்படும் திறக்கப்படாமல் உள்ளது.

மேலும் சிறுவர் பூங்காவும் பொதுமக்கள் பயன்பாட்டின்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

பழனியில் செட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்தால் அரசு திட்டங்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டவைகள் கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவில் திட்டங்களை முடக்கி வைத்த பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம். தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.