முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

இறந்த முதியவரை சுடுகாட்டில் புதைக்க விடாமல் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக குற்றச்சாட்டு.

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம், தேனி தாலுகா பூமலைக்குண்டு கிராமத்தை சேர்ந்த ராமர் (75) மனைவி மயில் தாய் (70)

இவர் நேற்று மாலை சுமார் 3 மணியளவில் கால் இடறி கீழே விழுந்து இறந்துவிட்டார்.

இறந்த மயில் தாயின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

இதனால் ராமர் அருகே உள்ள கோட்டூரிலிருந்து இறுதிச்சடங்கு செய்வதற்கு , பந்தல்,சேர், மைக் செட் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துள்ளார்.

தற்பொழுது மயில் தாயின் உடலை பூமலை கொண்டு கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதைப்பதற்கு கிராமத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் ராமர் செய்வதறியாது தவித்து வருகிறார்.