முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

கோம்பை பேரூராட்சி நிர்வாக முறைகேட்டை கண்டித்து பேனர்

By Web Desk

Updated on:

---Advertisement---

தமிழக அரசே! தமிழக அரசே! தேனி மாவட்ட நிர்வாகமே!

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

கோம்பை பேரூராட்சியை கண்டிக்கிறோம்!!!

கோம்பை பேரூராட்சி மாமன்றம் மாதம் தோறும் கவுன்சிலர் கூட்டம் நடைபெறும் ஆனால் கடந்த ஆறு மாதம் காலமாக எந்த ஒரு கூட்டமும் நடைபெறவில்லை. அதுக்கு என்ன காரணம் என்ன உள்நோக்கத்துடன் கோம்பை பேரூராட்சி நிர்வாகம் செயல்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துங்க !! தெரியப்படுத்துங்க !! தெரியப்படுத்துங்க!!

கோம்பை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1 வது வார்டு தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதியில் வேப்ப மரத் தெருவில் போர்வெல் அமைக்கும் பணி காண்ட்ராக்டர் KMPL.ரவி அவர்களால் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறு ஏறக்குறைய பத்து மாதங்கள் ஆகியும் மூன்று மாதம் கூட செயல்படவில்லை அதற்க்குல் மோட்டர் ஓடவில்லை. போரையும் காணவில்லை போர் குள்ள இருந்த மோட்டரே காணவில்லை. அதன் மதிப்பீடு 4,00000 ரூபாய் என்னாச்சு!! என்னாச்சு!! என்னாச்சு!!

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! மாவட்ட நிர்வாகமே!

புதிய தமிழகம் கட்சி|

கோம்பை பேரூர் கம்பம் சட்ட மன்ற தொகுதி என கோம்பை பேருந்து நிலையம் அருகே கோம்பை பேரூராட்சி முறைகேடுகளை கண்டித்து பேனர்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.