தேனி அருகே பழனிசெட்டிபட்டி பேரூராட்சி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தியின் அலட்சியத்தால் சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக காணப்படுவதால் பொதுமக்கள் தினதோறும் அவதி அடைந்து வருகின்றனர்.

பழனிசெட்டிபட்டி பேரூராட்சி 8 வது வார்டு, சுகதேவ் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையை பேவர் பிளாக் அகற்றிவிட்டு சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக சாலை தோண்டப்பட்டது.

இந்த தெருவில் பாதி சாலையில் சிமெண்ட் சாலை அமைத்துவிட்டு பாதி சாலையில் சிமெண்ட் சாலை அமைக்காமல் பணி கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனால் தினந்தோறும் ஏராளமான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் நடந்து செல்லும் போது கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பழனிசெட்டிபட்டி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை
எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அரைகுறையாக செய்யப்பட்டுள்ள சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை முழுவதுமாக முடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.