தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா, திருமலாபுரம் ஊராட்சி, ஏ ஆர் ரகுமான் கார்டன், பகுதியில் தனியார் கல்லூரியில் இருந்து வெளியேறக்கூடிய கழிவுநீர் நீர்நிலை ஓடையில் தேங்கி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயமான சூழ்நிலை நிலவி வருக்கிறது.

திருமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது.

இந்த தனியார் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரியில் உள்ள கழிவுநீர் மற்றும் ஹாஸ்டல் கழிவு நீர் நேரடியாக நீர்நிலை ஓடையில் திறந்தவெளியில் விடப்படுகிறது.

இந்த கழிவுநீர் தேங்கியுள்ள பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.
இந்த கழிவுநீர் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயமான சூழ்நிலை நிலவி வருகிறது.
எனவே உடனடியாக தனியார் கல்லூரியில் இருந்து திறந்த வெளியில் விடப்படும் கழிவுநீர் குறித்து ஆய்வு நடத்தி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.