ப
தேனி மாவட்டம், போடி அருகே முந்தல் சாலையில் அரசு உதவி பெறும் தனியார் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா தேனி எம்பி தங்கதமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தார்.
இதற்காக கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் மற்றும் உத்தம்பாளையம் நன்செய் அறக்கட்டளையும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 1000 மரக்கன்றுகள் நட்டு பல்லுயிர்களுக்கான வனத்தை உருவாக்கிட மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணி யன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்தார். உபதலைவர் ராமநாதன் வரவேற்றார்.
முன்னதாக தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், தேனி பாராளுமன்ற உறுப்பின ருமான தங்க தமிழ்செல்வன், மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து நிர்வாகக் குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், கல்லூரி முதல்வர் சிவக்குமார், நன்செய் அறக்கட்டளை தன்னார் வலர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். போடி திமுக நகரச்செயலாளர் புருஷோத்தமன், போடி நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், நகர் மன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.என்சிசி, என்எஸ்எஸ் அலுவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
