கரூரில் நடந்த 41 பேர் உயிரிழப்பிற்கு இரு தளபதிகளும் பொருப்பேற்க வேண்டும்,.
காமராஜரை மேற்கோள் காட்டும் விஜய் சினிமா ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு வருவதை போல் காமராஜரின் நேரம் தவறாமை நடத்தை போல் கரூர் கூட்டத்திற்கு நேரம் தவராமல் வந்திருந்தால் 41 பேர் உயிரிழப்பு நடந்திருக்காது என சிவபக்த சேனா பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்
தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சிவபக்த சேனா பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவுனர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கரூரில் விஜயை பார்க்க வந்த ஈரோட்டை சேர்ந்த மோகன் உயிர் இழந்தவரின் கண்பார்வையற்ற மோகனின் தாய்க்கு நிவாரண நிதி உதவி மட்டும் நிரந்தர தீர்வாகாது என்பதால் அந்த தாயை தவெக தத்து எடுக்க வேண்டும் என்றார்.
தேமுதிக நிறுவுனர் விஜய்காந்த் அவரது கட்சி கூட்டத்தில் அவர் அமைத்த தொண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்ததை போல் விஜய் தொண்டர் படை அமைத்திருந்தால் பாதுகாப்பும் கிடைத்திருக்கும் என்றார்.
ப




