முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

தேனி மாவட்ட அளவில் சிறந்த கல்லூரிக்கான விருதை வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெற்றது

By Web Desk

Published on:

---Advertisement---

நாட்டின் 79-வது சுதந்திர தின ஆகஸ்ட் 15.8.2025 இன்று விழா தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

அப்போது மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

விழாவில் தேனி மாவட்ட அளவில் சிறந்த கல்லூரி காண விருதை வீரபாண்டி அரசு கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ப. உமாதேவி பெற்றார்.

தேனி மாவட்டத்தில் சிறந்த கல்லூரி காண விருதைப் பெற்ற போது ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் கு. வான்மதி உடன் இருந்தார்.

வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு குழுக்கள் அமைத்தல்.
புத்தாக்கப்பயிற்சி அளித்தல், போதைப் பொருள் விழிப்புணர்வு, பொது இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லூரி வளாகத்தில் 1500 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்தல் உள்ளிட்டவை களுக்காக மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் அவர்களால் தேனி மாவட்டத்தில் சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டது.

கடந்த வருடமும் வீரபாண்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறந்த கல்லூரி காண விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது.

விழாவில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சினேஹப்ரியா, மாவட்ட திட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் அபிதா ஹனிப், மாவட்ட வருவாய் அலுவலர் மகாலட்சுமி, சார் ஆட்சியர் ரஜத் பீடன், உத்தம பாளையம் வருவாய் கோட்டாச்சியர் செய்யது அகமது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து மாதவன் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள்,
பள்ளி மாணவ, மாணவியர்களின் கலந்து கொண்டனர்.