தேனி மாவட்டம், குன்னூர் வைகை ஆற்றில் சேர்ந்திருந்த சுகாதாரமற்ற பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் துணிகள். உள்ளிட்ட கழிவுப் பொருட் களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்.
பெரியாறு அணையில் திறக்கப்படும் நீர், கொட்டங்குடி ஆற்றின் நீர், வருஷ நாடு மூல வைகை ஆற்று நீர் குன்னூர் பாலம் வழியாக வைகை அணையில் சேர்கிறது.
ஆற்று நீருடன் சேர்ந்து வரும் பிளாஸ்டிக் கழிவு கள், தண்ணீர் பாட்டில்கள், துணிகள், பாலிதீன் உள்ளிட்ட சுகாதாரமற்ற பொருட்கள் குன்னூர் பாலம் அருகே தேங்கி மாசடைந்து வந்தது.சுகாதாரப் ப
இதனை தேனி மாவட்ட நல்லோர் வட்டகுழு மாவட்ட பொறுப்பாளர் குறிஞ்சி மணி, எம்.சுப்புலாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மருந்தாளுநர் ரஞ்சித் குமார் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், என்.எஸ். எஸ்.மாணவர்கள் ஆற்றில் கிடந்த சுகாதாரமற்ற பொருட்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, தினதோறும் சாக்கடை கழிவுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், முல்லை பெரியார் மூல வைகை ஆறு கொட்டங்குடியாறு உள்ளிட்ட ஆறுகளில் வந்து சேர்கிறது. ஆண்டுதோறும் வீரபாண்டி கோயில் திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாலிதீன் பொருட்கள் மற்றும் துணிகளை ஆற்றில் போடு வதை தவிர்க்க வேண்டும். குன்னூர் ஆற்றில் பாலத்தில் இருந்து பலரும் கழிவு பொருட்களை ஆற்றில் கொட்டுகின்றனர்.
இதனால் வைகை ஆறு மாசடைகிறது இதனை நீர்வள ஆதாரத்துறையினர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தடுக்கப்பட வேண்டும், என்றனர்.

