முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

ராமகிருஷ்ணாபுறத்தில் அனுமதி பெற்று விட்டு சட்டவிரோதமாக நீர்நிலை ஓடைகள், விவசாய நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளை

By Web Desk

Updated on:

---Advertisement---

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் அனுமதி பெற்று விட்டு அனுமதி பெறாத மறப்பம்பட்டி தெப்பம்பட்டி அருகே விவசாய நிலங்களில் உரிய அனுமதியின்றி நீர்நிலை ஓடைகள் விவசாய நிலங்களில் சட்டவிரோதமாக தினந்தோறும் இரவு பகலாக கனிம வளங்கள் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்களை கொண்டு 10 டயர் மற்றும் 12 டயர் லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

எனவே இந்த கனிமவள கொள்ளையால் அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி சாலைகள் மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டவை அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக மாறி வருகிறது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கனிம வளைய கொள்ளையில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது புவியியல் மற்றும் சுரங்கத் துறையினர், வேளாண்மைத் துறையினர்,வனத்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ராமகிருஷ்ணாபுரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ரெகுபாரதி தலைமையில் உறவினர்களான வெற்றி கொண்டான், மோகன்ராம், ராஜேஷ் மணல் மாபியா கொள்ளை இரவு பகல் பாராமல் அரசுஅனுமதி வராமல் நடைபெற்று வருகிறது.. இதேபோல் தெப்பம்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் ஏழு இடங்களில் கனிம வளங்களை கொள்ளையடித்து ஒரு டிம்பர் லாரி .மணல் 40 ஆயிரம் ரூபாய்க்கு மணல் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.