முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

உயிர்பலி வாங்கிய அரசுக்கு சொந்தமான கல்குவாரி இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்த தீவிர முயற்சி

By Web Desk

Published on:

---Advertisement---

உயிர்பலி வாங்கிய அரசுக்கு சொந்தமான கல்குவாரி இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கடத்த தீவிர முயற்சி.

அரசு கல்குவாரி செயல்பட அனுமதி கொடுத்தால் புலிகள் சரணாலயம், சண்முகா நதி, முல்லை பெரியார், விவசாய நிலங்களில் நிலத்தடி நீர்மட்டம், வனவிலங்குகள் உள்ளிட்ட பாதிக்கும் அபாயம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயக்கவுண்டன்பட்டியில் அரசுக்கு சொந்தமான சங்கிலிக்கரடு கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆறு மாத காலமாக கல்குவாரி செயல்படுவதற்கான உரிமத்தை மாவட்ட நிர்வாகம் வழங்கவில்லை.

கடந்த ஆறு மாத காலமாக கல்குவாரி செயல்படுவதற்கு தடை விதித்திருப்பதால் கேரளாவிற்கு சட்ட விரோதமாக கனிம வளங்களை கடத்தும் கும்பல் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த பகுதியில் கல்குவாரி செயல்பட்ட கூடாது என எதிர்ப்பு தெரிவித்த நபர் படுகொலை செய்தனர்.

எனவே இந்த பகுதியில் மீண்டும் அரசுக்கு சொந்தமான கல்குவாரி செயற்பட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்த கல்குவாரியில் வைக்கப்படும் வெடிகளால் அருகில் உள்ள புலிகள் சரணாலயமான மேகமலை, சண்முகா நதி அணை முல்லைப் பெரியாறு அணை, விவசாயிகளின் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது.

இந்த கல்குவாரியில் இருந்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்களை கடத்த அனுமதி கொடுத்தால் கிராம சாலைகள் மற்றும் தமிழக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.