தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட தெற்கு தெரு, கக்கன்ஜி நகர் பகுதிகளில் பன்றிகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றசாட்டு.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகி பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்படி பகுதியில் பன்றிகள் பொதுமக்கள் வசிக்கக்கூடிய பகுதிகளுக்குள் நுழைந்தும் இல்லங்களில் வைக்கப்படும் பொருட்களை அசுத்தம் செய்தும் அதை தூரத்த செல்லும் பொது மக்களை கடிக்க முற்பட்டு துரத்துவதும் அப்பகுதியில் பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி தேவதானப்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி பேரூர் செயலாளர் மு. ராமகிருஷ்ணன் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதார துறையினரிடம் பொதுமக்களின் நலன் வேண்டி பல்வேறு முறை புகார் மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் பன்றிகளின் தொல்லையால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்புகள் நோய்த்தொற்றுகள் ஏற்படும் முன் தேனி மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் இது குறித்து தினம்தோறும் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினரிடம் பல முறை நேரில் கூறியும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பன்றி வளர்ப்போருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் . பொதுமக்களே பலமுறை பன்றி வளர்ப்போரிடம் கூறியும் உரிய பதில் அளிக்காமல் அரசு அதிகாரிகளின் தயவால் அலட்சிய போக்கை கடைபிடித்து பேசி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேற்படி பகுதிகளில் பன்றி தொல்லையால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்பட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டு வருவதாகவும் அப்போது மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
.மேலும் தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் பன்றி வளர்ப்போரை இனம் கண்டு தேவதானப்பட்டி பேரூராட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் காவல்துறையினர் மூலம் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேநிலை நீடித்தால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக தகவல் தெரிவித்துள்ளனர் .




