முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு

கண்மாயில் இரட்டை சகோதரர்கள் கனிம வளங்கள் கொள்ளை

By Web Desk

Published on:

---Advertisement---

தேனி மாவட்டம் அழகாபுரி அருகே உள்ள கண்மாயில் இரட்டை சகோதரர்கள் உரிய அனுமதி பெறாமல் நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் கொள்ளையடித்து வருகின்றனர்.

அல்லிநகரம் காவல் நிலையம் மற்றும் மாவட்ட நீதிமன்றம் இடையே உள்ள கம்மாயில் உரிய அனுமதியின்றி நூற்றுக்கணக்கான லாரிகளில் கனிம வளங்கள் தினந்தோறும் ஜேசிபி ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரா வாகனங்களை கொண்டு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

மலை அடிவாரத்தில் கண்மாய் கனிம வளங்களை ஐந்து அடிக்கு மேல் ஆழத்தில் மண்வளங்களை சுரண்டி பணம் பார்க்கும் இரட்டையர்கள்.வீரப்ப அய்யனார் கோயில் மற்றும் அழகர் கோயில் பகுதிகளில் தொடர்ந்து கனிம வளங்களை கொள்ளையடித்து வருகின்றனர்

இவர்களை மாவட்ட கனிமவள அதிகாரிகள் ஒரு முறை கூட ஆய்வுக்கு செல்வதில்லை. இதனால் விவசாய நிலங்கள் மற்றும் கண்மாய்களில் இந்த இரட்டை சகோதரர்கள் தொடர்ந்து சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளை அடித்து வருகின்றனர் .

எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.